திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி (14.05.2025) அன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு இலக்கை குறி பார்த்து சுடும் பயிற்சி பெற்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்