திருச்சி: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , பெரும்பான்மையான தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறுபவர்களைத் தடுக்க சிறப்பு சோதனை மையம், அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.அகிலா தலைமையிலான போலீசார் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.