திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி உட்கோட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றி அரசுக்கு ஆதாயம் ஆக்கப்பட்ட வாகனங்கள் மொத்தம் – 365 (இருசக்கர வாகனம் – 352, நான்கு சக்கர வாகனம் – 12, மூன்று சக்கர வாகனம் – 1) எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற (23.12.2024) ம் தேதி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு நான்குநேரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதில் களக்காடு காவல் நிலையத்தில் 2 நான்கு சக்கர வாகனமும், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் 2 நான்கு சக்கர வாகனமும் உள்ளது. மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் (22.12.2024) அன்று ரூபாய் 5000/- முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்