திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா (மேற்கு) வழிகாட்டுதலின் படி 05-10-2024 ம் தேதியன்று, சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சந்திப்பு காவல் ஆய்வாளர், பொன்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர், ஆஸ்மி மற்றும் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் காவல்துறை சார்பில் பொதுக்கூட்டம் நடத்தி சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதால் உண்டாகும் பயன்கள், சைபர் கிரைம் மோசடிகள், கஞ்சா, குட்கா, போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் தொடர்பான அறிவுரைகள், அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகள் தொலைபேசி எண்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்