தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள் மற்றும் ஆயுதங்கள் ஒப்படைப்பு குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிறைவேற்றப்பட்ட பிடியாணைகள் (Non-Bailable Warrants), நிலுவையில் உள்ள பிடியாணைகள், அதனை நிறைவேற்ற எடுத்து வரும் நடவடிகைகள் குறித்து கேட்டறிந்தார்.
தேர்தல் ஆணையம் (ECI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க மத்திய காவல் படைகளை (CAPFs) சிறப்பாக பயன்படுத்துவது குறித்தும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















