சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வு கவாத்தில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பையும், படைப்பிரிவுகளின் படைகலன்களையும் பார்வையிட்டு ஆயுதப்படையின் பணி அலுவலுக்கு பயன்படுத்தப்படும் 181 வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் திரு.அர்விந்த் இ.கா.ப மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர். இதில் 269 காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி