திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சீதபற்பநல்லூர், ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர் அய்யப்பன், முதல் நிலை காவலர் சரவண சேகர், இரண்டாம் நிலை காவலர் மலர்மன்னன், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடந்த 2010- ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர் படுத்தி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் கிடைக்க காரணமாக இருந்த தலைமை காவலர்கள் கோபால், பத்மாவதி ஆகியோரை
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., சரக காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்