திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர் பா.மூர்த்தி, இ.க.பா., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், உட்பட மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார். அலுவலக பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பராமரிப்பது குறித்து காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு விசாரணையை தீவிரபடுத்தவும் அறிவுறுத்தினார். அப்போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., உடன் இருந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்