திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் மாநில காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட, மற்றும் மாநகர, காவல்துறையினர் நகரின் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்