தூத்துக்குடி : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன்
அவர்கள் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் இன்று (09.04.2022) தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி ஆயுதப்படை, தூத்துக்குடி தென்பாகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று கொண்டிருந்த தூய்மைபடுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.