திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் (25.08.2025) சிவானி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் பற்றியும், பெண்கள் உதவி எண்களான 181, 1091 குழந்தைகள் உதவி எண் 1098 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு “காவல் உதவி” செயலியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 127 மாணவர்களுக்கு காவல் உதவி செயலினை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.