கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மகளிருக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார்,IAS., அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை,M.A.,ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நெடுந்தூர ஓட்டப் பந்தயம் கிருஷ்ணகிரியில் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு இருந்து – கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை முடிக்கப்பட்டது, பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரி மேம்பாலம் தொடங்கி – பர்கூர் திருப்பத்தூர் ரோடு ஜங்ஷனில் முடிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த மகளிர் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கர் அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் (சைபர் கிரைம்) அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முரளி அவர்கள், பர்கூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்