தென்காசி: போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிவகாசி தனியார் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது நடைபெற்றது. இதனை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் பாபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். குற்றாலம் காவல் சரகம் தென்றல் நகரில் துவங்கிய பேரணியானது பிரானூர் பார்டர் வழியாக குண்டாறு அணை சென்று மீண்டும் தென்றல் நகர் வந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள், போதை பொருட்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர்கள் இளமை பருவத்தில் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அதனை முற்றிலும் தவிர்த்து நல்ல முறையில் கல்வி பயின்று தங்களின் பெற்றோருக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.