திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா ப., உத்தரவின் பேரில், நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர், பிரசன்னகுமார், இ.கா.ப., ஆலோசனைப்படி ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா மேற்பார்வையில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு “தற்காப்புக் கலை கற்பிப்போம்” “பெண்களை காப்போம்” என்ற நோக்கில் காவல்துறை சார்பில் இலவசமாக சிலம்பம் உட்பட தற்காப்பு கலை பயிற்சிகள் ஏப்.1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம் பயிற்சியை பயிற்சியாளர்கள் பழனியாச்சி, ரூப சுவாதி ஆகியோர் அளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முகாமில் நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னகுமார், இ.கா.ப., மனைவி மருத்துவர் அபர்ணா கலந்துகொண்டு மாணவிகளுக்கு மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்