அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இரத்த வங்கியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமில் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் இரத்த தானம் செய்தனர்.
அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் உடன் இருந்தார்கள். மேலும் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் இருந்தார்கள். இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். மேலும் இரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.