அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரவிச்சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம். உடையார்பாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி மற்றும் விக்கிரமங்கலம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.