கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் காவல்துறை சார்பாக பேரணி நடத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும்,போதை தடுப்பு விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















