நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உடகோட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பகுதியில் அதிகம் இருளர் வகுப்பை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் பயன்பெறும் வகையில் காவல்துறை சார்பாக பழங்குடியினர் மேம்பாட்டு மையம் கட்டமைக்கப்பட்டு அதில் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் நோட்டுபுத்தகங்கள். ஒளிபடக்காட்டி (Projector). நகல் எந்திரம் (Xerox machine) மற்றும் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் வகையில் உடற்பயிற்சி சாதனங்கள் ஆகியவை வைத்து அதற்கென மூன்று அலுவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதனை நேற்று (09.12.2022) ம் தேதி கரிக்கையூர் பழங்குடியினர் மேம்பாட்டு மையத்தை திருமதி.மோனிகா ராணா, இ.ஆ.ப. திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் அவர்களால் திறந்து வைத்து பழங்குடியினர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
மேலும் ஸ்ரீ ஹரிகோட்டா விண்கள் ஏவுதளத்தை பார்வையிட கரிக்கையூர் அரசு பள்ளியில் இருந்து தேர்வான பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜு மற்றும் ரேவதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது .
மற்றும் பள்ளியில் படிக்கும். மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டது. உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ் ராவத், இ.கா.ப. வனத்துறை அதிகாரி திரு. ராஜ்குமார். இ.வ.ப. கண்டோன்மென்ட் தலைமை அதிகாரி திரு. முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.