திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரராஜ். அவர் கடந்த (07.12.2025) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை ரூ.15,00,000/- லட்சத்திற்கான காசோலையை (24.03.2026) அன்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., உயிரிழந்த சுந்தரராஜ் குடும்பத்தினரிடம் வழங்கினார். காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம் (கிழக்கு) மற்றும் வங்கி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















