தேனி: அரசு சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில்,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின்
அறிவுறுத்தலின்படி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இரவு,பகலாக மக்கள் பணியாற்றி வரும் காவல்துறையினரின் குடும்பத்தினரின் நலன் காக்கவும்,நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்கும் விதமாக காவல்
உட்கோட்ட அளவில் சிறப்பு முகாம் மையங்கள் அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றியும், தடுப்பூசி போடுவதற்கு முன்பு அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தக்க மருத்துவ பரிசோதனை செய்தும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை
எடுத்துக் கூறியும்,தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை வழங்கிய பின்பு காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.