மதுரை: மதுரைமாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் காவல்நிலையம் அங்கு உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது, இந்நிலையில் ரூபாய் 86 இலட்சம் மதிப்பீட்டில் நவின வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய காவல்நிலைய கட்டிடத்தினை தமிழக முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் இன்று காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,
இதனைத்தொடர்ந்து புதிய காவல்நிலைய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த மதுரை மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நிகழ்ச்சியில் பேசும்போது … காவல்துறையினர் குற்றங்களை தடுப்பதுடன், மக்களுக்கான சேவைகளை செய்யவும் தான் உள்ளது,
அதேபோல் நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் இணையவழி குற்றங்களை தடுக்கும் விதமாக வீடியோக்கள் மூலமாகவும், விழிப்புணர்வு கூட்டங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கூடுதல் காவல்த்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, மேலூர் காவல்த்துறை துணைக் கண்காணிப்பாளர்
திரு.பிரபாகரன், மேலூர் காவல்த்துறை ஆய்வாளர் திரு.சார்லஸ், மேலவளவு சார்பு ஆய்வாளர் திரு.ஜெயம்பாண்டியன், தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பிச்சை, திரு.முத்துக்குமார் , தலைமை காவலர் திரு.மாணிக்கம், குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் மருது, தலைமை காவலர் திரு.உதயகுமார் மற்றும் காவல்த்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்