தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயசார்பிரச்சினையின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசு நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும், சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், தென் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை. சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,* நம்முடைய அரசமைப்புப் பேரைவியல், 1949 நவம்பர் 26ம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதிமொழியில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு , சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜமால் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
















