திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்கள், காவல் அதிகாரிகளுக்கு நோய் தொற்று வராமல் இருப்பதற்காக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவை வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வருகின்றன.
காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அன்றாட தொடர்புடைய அமைச்சு பணியாளர்களுக்கு (Ministerial Staff) யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி வழங்க திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர் திரு. எம்.எஸ். முத்துசாமி,இ.கா.ப, அவர்கள் ஏற்பாட்டில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அலுவலகத்தில் பணியாற்றும் 30 அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.
மேற்படி யோகா பயிற்சியினை அமைச்சு பணியாளர்கள் சார்பில் திண்டுக்கல் சரக அலுவலக முதுநிலை நிர்வாக அதிகாரி திரு. ஜனார்தன் சிங் வரவேற்றுள்ளார்.