தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி இன்று தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (19.07.2025) சார்பு ஆய்வாளர் முதல் அதற்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி இன்று (19.07.2025) துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
மேற்படி வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுபகுமார், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் உட்பட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.