திருச்சி : மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்ட போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் முதல் பரிசு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுபடி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol / Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று 06.10.22 தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 20 காவல்துறை உயரதிகாரிகள் மத்திய மண்டல அளவில் கலந்து கொண்டார்கள். திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்கண்ட போட்டிகளில் 5.56 INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பங்கு பெற்று 25 அதிகாரிகளுக்கிடையேயான முதல் பரிசு வென்றார்கள்.
மேலும் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்ததில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 2ம் இடத்தை பிடித்தார்கள். மேலும் கண்டோன்மெணட் காவல் சரக உதவி ஆணையர் அவர்கள் 9mm பிஸ்டல் சுடுதல் போட்டியில் 3ம் இடத்தை பிடித்தார்கள்.மேலும் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்ததில் கண்டோன்மெணட் சரக உதவி ஆணையர் அவர்கள 3ம் இடத்தை பிடித்தார்கள்.இத்துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு; திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்கள்.