கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (28-01-25) மாவட்டம் முழுவதும்,
*No Helmet… No Entry* என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு முன்னெடுப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மாணவியர்கள் மத்தியில் ஏற்படுத்தியும், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட காவல் துறை எடுக்கும் சிறந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.