திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், பகுதியில் கடந்த 29.03.2022 ம் தேதி 1(2), வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொத்தையம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (27) , என்பவரை போக்சோ சட்டத்தில் கள்ளிமந்தயம் காவல்துறை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செல்லதுரையின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன், பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கள்ளிமந்தையம் போலீசார் செல்லதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைதானவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் எஸ்பி.சீனிவாசன், பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன் சுபாஹாஸ்மி, கோபிகிருஷ்ணன், ஆனந்த்பாபு, செல்லத்துரை, பெஞ்சமின் பிராங்கிளின், ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.