நாகப்பட்டினம்: இந்தியா- சீனா எல்லை பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி தேசிய அளவில் தேசிய காவலர்கள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (21.10,2024) தேதி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A. K அருண் கபிலன் இ. கா. ப அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயுதப்படை காவலர்கள் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.