பெரம்பலூர் : பெரம்பலூரில் காவல்துறை, சார்பில் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளின் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு, மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் வாணி, உதவி ஆய்வாளர் ராம்குமார், ஆகியோர் பேசுகையில், திருந்தி வாழ்வதற்கு தேவையான உதவிகள், அனைத்தும் காவல்துறை சார்பாக செய்து தரப்படும் மேலும் தொழில் தொடங்குவதற்கும், வேலை வாய்ப்பிற்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை உடனிருக்கும் என தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் இனி வரும் காலங்களில் குற்ற செயல்களிலும் ஈடுபடக்ககூடாது எனவும் அறிவுரை வழங்கினர்.