திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கணேஷ், அவர்களின் தலைமையிலான 120 காவல்துறையினர் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு எதிர்வரும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமான செயல்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.