திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு போலீசார் என கூறி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவைச் சேர்ந்த கருப்பையா மகன் தினகரன் (36) என்பவர் உங்கள் கடைகளில் பான்பராக் குட்கா விற்பனை செய்வதாக எனக்கு தொடர்ந்து புகார் வருகிறது. எனக்கூறி பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் சோதனை நடத்த ஆரம்பித்துள்ளார். கடைகளில் பான்பராக் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லாத நிலையில் கடைக்காரர்களிடம் உங்கள் கடைகளில் தான் விற்பனை செய்வதாக எனக்கு தகவல் வந்தது எனவே நீங்கள் எனக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அவரது அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அவர் சரவணன் என்ற பெயரில் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை வியாபாரிகளிடம் காட்டியுள்ளார். இது போலியான போலீஸ் அடையாள அட்டை என சந்தேகமடைந்த வியாபாரிகள் நத்தம் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் போலி போலீஸ் என கூறிவந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் அவர் போலி போலீஸ் என கண்டறிந்தனர் உடனடியாக குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குற்றவாளி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என போலீசார் கூறினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா