கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நடேசா கல்யாண மண்டபத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள், சேலம் சரக DIG திரு.பிரதீப்குமார் IPS அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட SP திரு.பண்டிகங்காதர் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களிடத்தில் காவல்துறையின் நன்மதிப்பு உயரும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள் கேட்டுக்கொண்டார்.