மதுரை: உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தலைக்கவசம் அவசியம் குறித்தும், இருசக்கர வாகன விபத்துகளை தடுப்பது குறித்தும் தலை கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த பேரணியை, உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அருள்சேகர்,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி, நகர் காவல் துறை சார்பு ஆய்வாளர் பால்துரை இணைந்து விழிப்புணர்வு துவக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துனர். இந்த விழிப்புணர்வு பேரணி அரசு போக்குவரத்து பணிமனையில்
துவங்கி மதுரை சாலை, தேனி சாலை, பேரையூர் சாலை வழியாக சென்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி