சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே சிறியூரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி கன்னிகா(38). நேற்று மாலை விளைநிலத்தில் களைபறித்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். புரசடை உடைப்பு அருகே வந்தபோது பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் முகவரி கேட்பது போல கன்னிகா அணிந்திருந்த 7பவுன் நகையை பறித்து சென்றனர். கன்னிகா அளித்த புகாரின் பேரில் காவல்துறையின் கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி