அரியலூர் : தமிழ்நாடு இணையக் குற்ற பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.சந்தீப் மிட்டல், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு.மனோகர் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படியும், சென்னை இணையக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.ஈஸ்வரன் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.விஜயராகவன் அவர்களின் தலைமையில், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (03.12.2024) இன்று நடைபெற்றது.
இதில் அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பெருகிவரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி (தங்களை காவல்துறையினர் Digital arrest செய்து இருப்பதாக கூறி பணம் பறித்தல்), TASK மோசடி( டாஸ்க் செய்தால் அதிக பணம் தருவதாக கூறி) , online trading மோசடி, online investments மோசடி (சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி),OTP மோசடி, KYC Update மோசடி, ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும் அந்த குற்றங்களிலும் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இணையவழி மூலம் பணம் இழந்தால், உடனடியாக புகாரை பதிவு செய்ய அழைக்க வேண்டிய உதவி எண் 1930 மற்றும் இணையதளம் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து, அவர்களுக்கு இணையவழி குற்றப்பிரிவு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ மாணவிகள், முதல்வர் திரு.நாகராஜன் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .