திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாபநாசம் சிவன் கோவில் பின்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த தென்காசி, கீழ ஆம்பூரை சேர்ந்த ராமமூர்த்தி(51). மாரியம்மாள்(51). ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது காவல்துறையினரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் வைத்து இருந்த சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ 930 கிராம் புகையிலை பொருட்களையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்