திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த சர்க்கரை அளவு, கண்பார்வை பரிசோதனை, பல் மருத்துவ ஆலோசனை, இரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை, வெரிகோஸ் மற்றும் சிறுநீரக கல்லடைப்பு போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்