தூத்துக்குடி: மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்வது பற்றியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் கண்காணிக்கப்படும் குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 48 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.