திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவணங்குடி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பெண்ணிடம் சுமார் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடிய பின்னர் பெயர் விலாசம் கேட்டு தெரிந்த மகேஷ் குமார் வயது 39 த. பெ. ஆறுமுகம் செட்டித்தெரங்காடு மூலக்காடு போஸ்ட் பாலக்காடு கேரளா என்பவரை பொதுமக்கள் மற்றும் திரு ஆவினங்குடி போலீஸ் பூத்தில் பணியில் இருந்த ஊர்க்காவல் படையினர் துரத்தி பிடித்தும் உடனே அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி சார்பு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி மற்றும் குற்றவாளி பறித்து சென்ற செயினை கைப்பற்றியும் குற்றவாளி மீது அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த செயலால் ஊர்காவல் படையினரை வெகுவாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஊர்க்காவல் படையினரை பணியமர்த்திய பழனி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் மற்றும் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் அவர்களையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா