திருநெல்வேலி : திருநெல்வேலி காவலர் பயிற்சியில், பயிற்சி காவலர்களுக்கு முப்பெரும் சட்டங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் போன்ற வகுப்புகள் முதன்மை சட்டபோதகர்களால், நடத்தப்பட்டு காவலர்களுக்கு தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெற்றது. காவலர்கள் மிடுக்கான தோற்றத்தை ஏற்படுத்த கவாத்து போதாகர்களால் கவாத்து பயிற்சி காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்பட்டு, பயிற்சியில் காவலர்களுக்கு மீட்பு பணிகள், முதலுதவி பயிற்சி, கமாண்டோ பயிற்சி, சிறப்பு இலக்கு படை பயிற்சி (special Task Force) வெடிகுண்டு பிரிவு குறித்து பயிற்சி, மோப்பநாய் பிரிவு மூலம் பயிற்சி, துப்பாக்கி கையாளும் முறைகள் மற்றும் CCTNS வளைதளம் குறித்து பயிற்சி, சிறைதுறை பார்வையிடுதல் மேலும் பயிற்சியில் முக்கியமாக அனுபவமிக்க ஓட்டுநர் மூலம் 95 காவலர்களுக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீச்சல், கராத்தே மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுள்ளது.
மேலும் காவலர்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதற்கான தண்டனைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பயிற்சி காவலர்களுக்கு நடைபெற்ற கவாத்து பயிற்சியிலும், விளையாட்டி போட்டியிலும் நமது காவலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு சிறப்பான முறையில் செயல்பட்ட காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா (19.10.2022)-ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு. அவினாஷ்குமார் இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
காவலர்களுக்கு பயிற்சி அளித்த கவாத்து போதகர்கள் மற்றும் சட்ட போதகர்களுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள் கேடயம் வழங்கினார். நிறைவாக காவலர்கள் துப்பாக்கிகள் கையாளும் முறைகள் பற்றியும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் மற்றும் முதலுதவி அளிக்கும் செயல் விளக்கங்களை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தும் மற்றும் போர்வீரர் அணிவகுப்புகளை செய்து காண்பித்தும் அனைவரின் பாராட்டுக்களை பெற்றனர். பயிற்சி பெற்ற காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு விழா முடிந்து 1 மாதம் அடிப்படை பயிற்சி சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சீனிவாசன், பயிற்சி பள்ளி துணை முதல்வர் திரு.சுப்பிரமணியன், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு.மகேஸ்வரி, முதன்மை சட்டபோதகர் திருமதி.சாந்தி, முதன்மை கவாத்து போதகர் திரு.சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.