தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 16 காவல் துறையினருக்கு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 16 பேர் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை காவலர் சேமநல நிதியிலிருந்து பெற்று தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர்.
அதன்படி காவலர் சேமநல நிதியிலிருந்து மேற்படி 16 பேருக்கும் வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (19.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு வழங்கினார்.