தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 காவல்துறையினர் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை காவலர் சேமநல நிதி மற்றும் காவலர் நூற்றாண்டு கல்வி உதவித் தொகையின் கீழ் பெற்று தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர். அதன்படி அவர்கள் மனு பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு காவலர் சேமநலநிதி மற்றும் காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் வழங்கப்பட்ட மொத்தம் ரூபாய் 3,38,500/- உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (19.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு வழங்கி கல்வியை சிறப்பாக கற்று வெற்றி பெற வாழ்த்தினார்.