தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த (20.12.2024) அன்று இரவு குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (23.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.