தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 85 பேர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 660 பேர் என மொத்தம் 745 காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று மற்றும் நாளையும் நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.