தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையை (03.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்ற சம்பவம் நடவாமல் தடுக்கும் பொருட்டு மற்றும் சந்தேகத்திற்கிடமாக வரும் வாகனங்களை ஆய்வு செய்து வாகன தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினர் பிரதிபலிப்பு ஜாக்கெட் அணிந்தும் (Reflecting Jacket), போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக நிறுத்தியும் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
                                











			
		    



