திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மீன் சந்தையில் கடை வைத்திருக்கும் சோரிஸ்கோஸ்தா என்பவர் கீழே கிடந்து தங்க செயினை எடுத்துள்ளார். அதனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் அருகில் உள்ள வள்ளியூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின் வள்ளியூர் போலீசார் விசாரணை செய்து தங்கச் செயினை தவறவிட்ட நபரை வரவழைத்து தக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி தங்கச்செயினை அவரிடம் ஒப்படைத்தார்கள். தங்க செயினை எடுத்து கொடுத்த சோரிஸ்கோஸ்தாவை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.