தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் எந்நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (13.03.2025) நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.