தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரத்ததானம் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் திருமதி. சாந்தி மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்த இரத்ததான முகாமில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. திருமுருகன், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.