நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட, காவல்துறையில் பணி காலத்தின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும், மற்றும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ செலவினை ஈடு செய்யும் வகையில் காவலர் குடும்ப சேமநல நிதியிலிருந்து பெறப்பட்டு சுமார் ரூபாய் 5,85,059/- காசோலையை காவல்துறையின் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் வழங்கினார்கள். மேலும் இன்று நடந்த இந்நிகழ்ச்சியில் காவலர் சேமநல நிதியின் மூலமாக 21 காவல்துறையினர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.