திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட, காவல்துறையினர் தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையினர், சனிக்கிழமைகளில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்ஸிஸ், அவர்கள் முன்னிலையில் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தொடர் பணியிலும் (16.07.2022),-ம் தேதி அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையினர், தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், பாபநாசம் மலைப்பகுதியில் நடைபயிற்சி, ரன்னிங் (Road walk & Run), கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். தவறாது கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் அம்பாசமுத்திர உட்கோட்ட காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.